Header Ads Widget

Main Menu Bar

test

கொண்டாடுறதும் குற்றந்தான்


திரைப்படங்களில் ஜாதி:

திரைப்படங்கள்ள தேவர் சமூகத்தப் பத்தி படமெடுத்தா, அதப் பாக்குறதுக்கான மனோநிலை எல்லார்கிட்டயும் வந்திருச்சு. அதுல நடிக்கிற ஹீரோ, டெக்னீஷியன்கள், டேரக்டரேகூட வேற சமூகத்தச் சேத்தவரா இருக்கலாம், ஆனாலும் அவங்க எல்லாரும் சேந்து தேவர் சமூக படத்த எடுக்கிறாங்க. இதுக்கான உளவியல் காரணங்கள் தெரியல, ஆனாலும் நாம எல்லாருமே ஒருவகைல அந்தப் படங்களையும், அந்த சமூகத்தையும் ஏத்துக்கிற மனோநிலைலதான் இருக்குறோம். மத்த சமூகத்தப் பத்தி பொருசா யாரும் படமெடுக்குறதில்ல. அப்படியே எடுத்தாலும் அந்தப் படங்கள் பொருசா ஓடுறதுமில்ல.” அப்படின்னு ஒரு நண்பர் டீக் கடைல நின்னு பேசிக்கிட்டிருந்தாரு. அத மறுத்து சில விஷயங்கள நான் பேசுனேன். ஆனா அந்த உரையாடல் சில காரணங்களால இடைலயே நின்னு போச்சு.

எல்லாப் பெரிய துறைகள்ளயும் இருக்குற மாதிரி, திரைப்படத் துறைலயும், அது சார்ந்த தெலைக்காட்சி ஊடகங்கள்ளயும் அண்ணைல இருந்து இண்ணக்கி வரைக்கும் பிராமணர்களின் ஆதிக்கம்தான் அதிகம். இத யாராலயும் மறுக்க முடியாது. இண்ணக்கி பல வேற்று ஜாதிக்காரங்க மொளச்சி வந்துட்டாலும், சில முக்கியமான பொறுப்புகள்ளயும், திரைப்படத்துறைல சில குறிப்பிட்ட பிறிவுகள்ளயும், அவங்கதான் இருக்குறாங்க. அதனால இண்ணைக்கும், ஒரு பிராமணரின் பங்களிப்பு கூட இல்லாம ஒரு படத்த முழுசாஎடுத்து வெளிக் கொண்டுவர்றதுங்கிறது சாத்தியமில்லாத விஷயந்தான். மற்ற ஜாதிகள் அப்படி ஒரு அழுத்தமான இடத்த தக்க வச்சிக்கிட்டதா எனக்குத் தோணல.

அதுக்கு ஒரு அடிப்படை காரணமும் உண்டு. பொதுவா பிராமணர்கள் எந்தப் புதுத் துறைலயும், அது நல்ல லாபம் வர்ற துறையா இருந்தா மொதல்ல நுழைறதும், அங்க தலைமைப் பொறுப்புகள்ளயோ, அல்லது அதுக்கு அடுத்த நிலைகள்ளயோ தங்களின் ஆதிக்கத்த தக்க வச்சுக்கிறதும், அவர்களின் சர்வைவலுக்கான பொதுக்குணம்.
இத ஏன் இவ்வளவு நீடி முழக்கி சொல்றேன்னா, திரைப் படங்கள் மொதல் மொதல்ல இந்தியாவுக்குள்ள நுழைஞ்சப்பவும் சரி, தமிழகத்துல நுழைஞ்சப்பவும் சரி, தங்களுக்கான ஒரு பிரதான இடத்தப் புடிச்சுக்கிட்டாங்க பிராமணர்கள். திராவிட இயக்கங்கள் தலைதூக்கி நின்ன காலகட்டத்து கூட அதையும் மீறி, புராண படங்களையும், அதில பிராமண கலாச்சாரத்தையும் புகுத்திகிட்டேதான் இருந்திருக்காங்க.

அறுபது, ஏழுபதுகள்ள வந்த சமூகப் படங்கள்ள கூடபட்டு,கிட்டு, பிரஸ்டீஜ் பத்மநாதன்ன்னு  ஐயர் குடும்பங்களில் நிகழ்வதான கதைகள்தான் நம்ம முன்னால கட்சிப் படுத்தப்பட்டுது. அப்ப வேற எந்த குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களையும் திரைப் படங்கள்ள பாக்க முடியாது. ஆனா அப்பவும் எல்லா ஜாதி டெகனீஷியன்களும் இருக்கத்தான் சொஞ்சாங்க. அந்தப் படங்கள எல்லாதரப்பு மக்களும் ரசிக்கத்தான் செஞ்சிருக்காங்க.

ஆன அதுல அவங்கள்ட பாராட்ட வேண்டிய சின்ன விசயம், திரைப்படத்துக்கான பெது மொழி உருவானதுல தங்களின் உச்சரிப்புகள் கலக்குற அளவுக்கு ஆதிக்கம் சொலுத்தியிருந்தாலும்பிராமணன்னா சும்மா இல்லடா . . . நாங்க நெனச்சா உலகத்தயே தலைகீழாப் பொறட்டுவண்டா . . .” ன்னு பஞ்ச் டயலாக்குகள்ளாம் வச்சுக்கிட்டதில்ல. வெட்டி வார்த்தைகள உதிர்த்ததில்ல. அதுக்கு அண்ணக்கி இருந்த டிரண்டும் ஒரு காரணமா இருந்திருக்கலாம்.

இதுக்கு இடைல சில படங்கள்ள பேர்களுக்குப் பின்னால பிள்ளைன்னு ஜாதி சொல்ற சில கதாப்பாத்திரங்கள் வருமே தவிர, அந்த சமூகத்துக்கான வாழ்வியலோ, சூழலோ, பெரிய அளவுல காண்பிக்கப் பட்டதில்ல.

அதுக்கஅப்புறம் வந்த பாரதி ராஜா கிராமத்தின் உண்மையான சூழல ஓரளவுக்குச் சரியா படம் புடிச்சாரு. அது வெற்றி பெற்றதால பல படங்கள் அந்தக் காலகட்டத்துல வெவ்வேறு டைரக்டர்களால கிராமத்துச் சூழல அடிப்படையா வச்சு வெளிவந்துச்சு. ஆனாலும் பாரதிராஜாதான் கிராமத்துச் சூழல அழகா வெளிக் கொண்டு வந்ததுல முதன்மையானவர். இது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். ஆனா அவரும் அவர் பார்த்த, அவர் வாழ்ந்த கிராமத்ததான் திரைல காட்டுனாரு. அதனால அவரச் சுற்றிய ஜாதிகளையும், அதன் பேர்களக் கொண்ட கதாப்பாத்திரங்களையும் அவர் படங்கள்ள பாக்கலாம். ஆனா அப்ப கூட அந்த ஜாதிய உயர்த்திப் பிடிக்கிற மாதிரியோ, பஞ்ச் டயலாக்கெல்லாம் வச்சு பத்து பக்கத்துக்கு வசனம் பேசுற மாதிரியோ இல்லாம

பாலு ங்கிறது உங்க பேரு . . . தேவர்ங்கிறது நீங்க வாங்கின பட்டமா? . . “
ன்னெல்லாம் ஜாதிக்கு எதிரான சிறு விமர்சனப பார்வையையும் முன் வச்சாரு. ஆனாலும் அவர் படங்கள் மூலமாத்தான் தேவர் சமூகத்தின் தனிப்பட்ட அடையாளங்கள் திரைப் படங்கள்ள மொதல் மொதல்ல வெளிவந்துச்சு.

அதுக்கு அடுத்து வந்த ஒருசில மாற்றங்கள், சில வருஷங்கள்ள திரைப்படத்துறைலகௌண்டர்ங்கிற ஜாதியையும் அதன் மேன்மைகளையும், துதிபாடுற மாதிரியான சூழல ஏற்படுத்திச்சு. அப்படித்தான் கோயம்புத்தூர் பாசையும் திரைப் படங்கள்ள பெருசா ஆதிக்கம் சொலுத்திச்சு. அதுல சின்னக்கௌண்டர் ங்கிற படம்தான் மிக முக்கியமான படம். அதுல நடிச்சவரோ, அதுக்கு இசையமச்சவரோ, அந்த சமூகத்தச் சேர்ந்தவரில்ல. ஆனலும் அவங்க அந்தப் படங்கள்ள பங்கெடுத்துக்கிட்டாங்க.

ஒரு படம் ஹிட்டாயிட்டுதுன்னா, அதே பாணில படங்கள எடுக்கிறதுங்கிறது திரைப் படத்துறையோட பொதுவான இயல்பு. அதுக்குக் காரணமும் உண்டு, பெரும் பணம்போட்டு தயாரிக்கப் படுற படங்கள் எப்படியாவது வெற்றி பெறணுங்கிற நோக்கத்தால, குறிப்பா பணம் போடுற தயாரிப்பாளர்கள் முந்தய வெற்றிப் படங்கள ஜெராக்ஸ் போடுற வேலையதான் அடுத்த டைரக்டர்களுக்கும் கொடுக்குறாங்க. அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியோ, அல்லது கதைக் களமோ புரமோட் பண்ணப்படுது.

இதுல ஒரு ஜாதியையோ, அல்லது அது சார்ந் கதைக் களத்தையோ திரைக்குக் கொண்ண்டு வர்றதுங்கிறது பெரும்பாலும் டேரைக்டர்கள்தான். என்னதான் ஜெரக்ஸ் போடுற வேலைகள் தொடர்ந்து நடந்துகிட்டிருந்தாலும் அதுக்கு மத்தியில தன்னோட கதையையும், அதுக்கான களத்தையும் ஒரு டேரைக்டர் புதுசா அறிமுகப் படுத்தி, அதுல வெற்றியும் பெற்றுட்டாருன்னா, அதத் தொடர்ந்து அதேமாதிரியான படங்கள் வரத்தொடங்கும்.

அப்படித்தான் K.S. ரவிக்குமார், R. V. உதயகுமார், மணிவண்ணன் போன்ற டேரைக்டர்கள் கௌண்டர் படங்கள எடுத்து வெகுஜன ரசனைக்கான அங்கீகாரத்தையும் பெற்றாங்க.

திருநெல்வேலி மாவட்டத்துல, தென்காசி பக்கத்துல பொறந்து வளந்த எனக்கு கௌண்டர் ன்னு ஒரு ஜாதி இருக்குறதும், அவங்க இப்படித்தான் பேசுவாங்க ங்கிறதும், திரைப்படங்களப் பாத்துதான் தெரியும்.

அதுலயும், சின்னக் கௌண்டரெல்லாம், புனிதர்லயும், மாகாப் புனிதரா சித்தரிக்கப் பட்டிருப்பாரு. அந்தப் படத்துல ஆரம்பத்துலயே, கதானயகன அறிமுகப் படுத்துற பாட்டு ஒண்ணு வரும்.

சாட்சிகள செட்டப் பண்ணும் வேல இங்க இல்ல, இல்ல . .
வக்கீலு பொய்யச் சொல்லுவான்  வாதம் இங்கு வந்த தில்ல . . .
ஏடெடுத்துப் படிச்சதில்ல எவனுக்கும் நீ கொறஞ்சதில்ல . . .

அப்படின்னு தொண்ணூறுகளின் தொடக்கத்துல குழாய் கட்டி பாட்டுப் போடுவாங்க.

அரசாங்கமும் , நீதித்துறையும் வலுவா இயங்கிக்கிட்டிருந்த அந்தக் காலகட்டத்துலயும் இப்படியெல்லாம் கட்டப் பஞ்சாயத்த ஞாயம்மடுத்துற பாட்டுகளையும், படங்களையும் எடுத்து கௌண்டர் ஜாதிய காசு கொடுத்துப் பாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்குனாங்க அந்த டேரைக்டர்கள்.

அதனாலதான், நாட்டாமை, சேரன் பாண்டியன், போன்ற படங்கள்ள சரத்குமார் கோய்புத்தூர் பாச பேசிக்கிட்டிருந்தாரு. விஜாயகுமார் ங்கிற ஒரு நடிகர் பல படங்கள்ளயும், இப்ப சீரியல்கள்ளயும் கூட நாட்டாமையாவே வாழ்ந்துகிட்டிருக்காரு.

அந்த மாதிரியான படங்களின் வீழ்ச்சியத் தொடர்ந்து, அந்த ஜாதியோட ஆதிக்கம் திரைப்படங்கள்ள இல்லாமலே போச்சு. கோயமுத்தூர் பாஷகூட இப்ப பல படங்கள்ள வர்றதேஇல்ல.

ஆனா என் நண்பர் சொன்ன தேவர் ஜாதிய ஏத்துக்கிற மனப்பக்குவம் எங்க இருந்து ஆரம்பிச்சுது?

சின்னக் கௌண்டர் படம் வெளிவந்த 1992ம் வருஷமே வெளிவந்த படந்தான்தேவர் மகன் இந்தப் படத்துல நடிச்சிருந்த கமல் தேவர் சமூகத்து சேர்ந்தவரில்லங்கிறுது பெரும்பாலோருக்குத் தெரிஞ்ச விஷயம். ஆனா அந்த சமூகத்தின் மேலயோ, அந்த சமூகத்தினரின் வாழ்க்கை முறை மேலயோ தனிப்பட்ட ஈர்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். அல்லது நான் ஒரு வியாபாரின்னு தன்னத் தானே சொல்லிக்கிற பெருந்தன்மை கொண்ட  கமலுக்கு, இது வியாபாரம் செய்வதற்கான நல்ல கதையா, நல்ல கதைக் களமாத் தோணி இருக்கலாம். ஆனா இந்த படம்தான் தேவர் சாதிய பெரிய அளவுல போற்றிப் பாடிச்சு.

ஒரு பக்கம் கௌண்டர் மேல பலர் கண்ணும் பட்டுகிட்டிருக்க, இன்னொரு பக்கம் தேவர போற்றிப் பாடிக்கிட்டிருந்துச்சு பல திரையரங்குகள்.

இந்தப் படத்துக் கப்புறம் பல தேவர் வீட்டுத் திருமண விழாக்கள்ள ஒரு பக்கம் கார்த்திக் நிக்க இன்னொரு பக்கம் மீசய முறுக்கிகுட்டு, வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு கமல் நிக்கிறமாதிரியான வால்போஸ்டர்கள ஒட்டுற அளவுக்கு, அந்த சமூகத்தார் மத்தியில தனி அபிமானத்தப் பெற்றாரு கமல்.

இதுக்கு இடைல பல தேவர் சமூகப் படங்கள் வத்திருக்கலாம், ஆனா தேவர்மகன் படத்த இண்ணக்கி நெனச்சாலும், கமல் கத்தயான மீசயோட வள்ள வேட்டி, வள்ள சட்டை சகிதமா, வெறப்பா நிக்கிறமாதிரியான உருவம் நம்ம கண்ணுமுன்னால வந்துபோகும். அந்த அளவுக்கு தேவர் மகன் படம் பெரும்பாலோர் மனசுல ஆழமாப் பதிஞ்சு போச்சு. அதுக்கு சிவாஜி, கமல் ன்னு ரெண்டு பெரும் நடிகர்கள் ஒன்றிணஞ்சு நடிச்சிருந்ததும் முக்கிய காரணமுன்னு சொல்லலாம்.

அதுக்கப்புறம் 1993ல வளிவந்த கிழக்குச் சீமையிலே 1994ல வெளிவந்த சீவலப் பேரிப் பாண்டி, 2004ல வெளிவந்த விருமாண்டி, 2005ல வெளிவந்த சண்டக் கேழி, அதுக்கு இடைல ஒரு சில படங்கள் வளிவந்திருந்தாலும் கடைசியா சசிக்குமார் நடிச்சு வெளிவந்தசுந்தர பாண்டியன், “குட்டிப் புலி போன்ற படங்கள்தான் என் நண்பர் சொன்ன கருத்துக்குக் காரமான படங்கள்.

அதுலயும் சுந்தரபாண்டியன்ங்கிற படமெல்லாம் அதன் தொடக்கத்துலயே, ஜாதிய வன்மத்த தூண்டுறமாதிரியான வார்தைப் பின்புலங்களோடதான் ஆரம்பிக்கும்.

ஜீன்ஸ் பேண்டையும், டீ - சர்டையும் போட்டுகிட்டு எங்க சாதிப் பொண்ணுகள தலித்துகள் ஏமாத்துறாங்கன்னு சொன்ன ராமதாஸின் கருத்த அப்படியே வசனமாக்கி. அதுக்கு கொலதான் பதில்ன்னு நேரடியாவே மெறட்டியிருப்பாங்க.

ஆனா இந்த மாதிரியான படங்களின் வெற்றிங்கிறது அதன் ஸ்வாரசியமான கதை நகர்த்தல்ல இருக்கே தவிர அது ஒரு சாதிய பின்புலமாக் கொண்டு எடுக்கப் படுறதால இல்ல.

அதுலயும் இந்தப் படங்கள, படிச்ச, பக்குவமுள்ள ஒரு மனுசன் ஜாதிய அசிங்கத்தின அடையாளமாகவும், பழைய காட்டிமிராண்டித்தனத்தின் மிச்சமாகவுந்தான்  பாப்பானே தவிர, இத ஒரு போற்றுதலுக்குறிய விசயமா பாக்கமாட்டான். அதனால என் நண்பர் சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்ல.

போட்டி மனப்பான்மையுடன் எடுக்கப் படும் ஜாதிய திரைப் படங்கள்:

இதுக்கு இடைல ஹரிங்கிற டேரைக்டர் தான் பாத்த கதைக் களங்களயும், கதைமாந்தர்களையும், கொஞ்சம் விறுவறுப்பா மசாலா கலந்த திரைப்படங்களக் கொடுத்தாரு. அதுல அவர் எந்த சமூகத்தின் பெயர்களையும் குறிப்பிடாட்டதில்ல. ஆனாலும் அவர் எடுத்த பல படங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியையே பின்புலமாக் கொண்டதுங்கிறத கொஞ்சம் கவனிச்சுப் பாத்தா தெரியும்.

2005ல வெளிவந்த சண்டக்கோழி படத்துல ஒரு சீன் வரும். நகரத்துல இருந்து கதாநாயகன வெறட்டிக்கிட்டு கிராமத்துக்கு வருவாரு வில்லன். அப்ப அவரோட கார், ஒரு ஆட்டுக் குட்டிய அடிச்சிறும். உடனே அதப்பாத்து ஒரு பொம்பள ஆலற, சுத்தி இருந்த ஆட்கள் கம்பு, கடப்பாறையோட கண்ணிமைக்கிற நேரத்துல கார அடிச்சு சேதப்படுத்துவாங்க. அதப்பாத்த கதாநாயகனின் அப்பா அவங்கள சமாதானப் படுத்தி பிரச்சனய முடிச்சு அனுப்பி வப்பாரு.

இதுல ஒரு ஆட்டுக்குட்டிக்கே இவ்வளவு ரீயாக்ஷன்னா ஊர்தலைவரேட மகனான ஹீரோவத் தொட்டா என்ன நடக்குமுன்னு பதியவச்சிருப்பாங்க.

அதுக்கப்புறம் 2010ல வெளிவந்த சிங்கம் படத்`துல கண்டிசன் பெயில்ல கையெழுத்துப் போடுறதுக்காக சென்னைல இருந்து வர்ற வில்லன், கிராமத்து ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரான ஹீரோகிட்ட தன்னோட பலத்த காட்ட முயற்சிபண்ணுவாரு. அந்த சமயத்துல ஸ்டேஷனுக்குப் பின்னால அறுவா, உருட்டுக்கட்டையோட, மறைவா நிறுத்தி வச்சமாதிரி திடீர்ன்னு நுழைற ஒரு கூட்டம் வில்லனோட வாகனத்த அடிச்சு நொறுக்கும். சண்டக் கோழி படத்துல வந்த சீனுக்கும், இந்த சீனுக்கும் நெருங்கிய தொடர்பிருக்குன்னே நெனக்கிறேன்.
இந்தப் படத்துல இன்ஸ்பெக்டரான சூரியா கொந்தளிச்சு நிக்கிற கூட்டத்தத் தடுத்துநாங்கல்லாம், பாசக்காரங்கடா. . . , நேசக் காரங்கடான்னு சுமார் பத்து பக்க வசனத்த ஒரே மூச்சில பேசி முடிப்பாரு.
இத ஏன் இவ்வளவு வெவரமாச் சொன்னேன்னா ஜாதி சார்ந்த படங்கள் ஒருவகையான போட்டி உணர்வோட மாற்றி மாற்றி எடுக்கப்பட்டு சமூகத்துல ஜாதிய எண்ணங்கள நிலைபெற வைப்பதற்கான முயற்சியச் செய்யுதுங்கிறது என்னோட எண்ணம்.

ஜாதிய திரைப்படங்கள் வெளிவருவதற்கான அடிப்படைக் காரணங்கள்:

ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான படங்கள் சில கால கட்டங்கள்ள வெற்றி பெறுறதுக்கான முக்கிய காரணம், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதை புரமோட் பண்ணுறமாதிரியான கதைகளோட வர்ற டைரக்டர்களும், அதுக்கு ஊக்கங்கொடுக்குற புரடியூசர்களும்தான்.

இது தவிர தலைவன் சார்ந்தே கதைகளை உருவாக்குற நம்மோட இலக்கிய மரபுப்படி கிராமச் சூழல படமெடுக்குறப்ப நாட்டாமைகளும், ஜமீந்தார்களுமே வீர வசனங்கள் பேசுறதுக்கான ஏற்ற கதாப்பாத்திரங்களா இருப்பாங்க. அதனால அந்த பெறுப்புகள்ள இருந்த ஜாதிகள் சினிமாத்துறையால புரமோட் பண்ணப் பட்டிருக்கலாம்.

மாற்றம் தவிர்க்க முடியாதது:

கலை ரசனைங்கிறது காலத்துகுக் காலம் மாறுபடக் கூடியது. நாளைக்கே இதுவரை வெளிவராத ஒரு ஜாதி, அல்லது சமூகத்தின் வாழ்கைமுறை மக்களின் ரசனைக்கேற்ப படமாக்கப்பட்டு அது வெற்றியும் பெற்றா சினிமாத்துறைங்கிற மகா பெரிய ஏந்திரம் அதேமாதிரியான படங்கள சில காலத்துக்கு தெடந்து தயாரிச்சுத் தள்ளலாம்.

அப்பவும் அதுல பணிபுரிறவங்க வெவ்வேறு ஜாதியச் சேந்தவங்களா இருப்பாங்க. அதப் பாக்குற ஆடியன்சும் வெவ்வேற தளங்கள்ள இருப்பாங்க. அதுக்காக அந்த குறிப்பிட்ட ஜாதியையோ, அதன் வாழ்கை முறையையோ எல்லாரும் ஏத்துக்கிட்டங்கன்னு சொல்ல முடியாது.

ஏதிர்காலத்துல இதுமாதிரியான ஜாதியப் படங்கள் வர்றதுக்கான வாய்ப்புகளே கூட இல்லாத அளவுக்கு மக்களின் ரசனையும், வாழ்கை முறையும் முற்றிலும் மாறிப்போகலாம். அப்ப இன்றைய அல்லது நேற்றைய படங்களப்பாக்குற வருங்கால ஆடியன்சுகள் எந்தவித ஜாதிய தாக்கமுமில்லாம வெறுமனேஒருகாலத்துல எப்படியெல்லாம் படமெடுத்துருக்குறாங்க பாரு . . . ன்னு வேடிக்க பாக்குற மாதிரியான சூழல் கூட உருவாகலாம்.

அதனால என் நண்பர் சொன்ன அந்தக் கருத்த என்னால ஏத்துக்க முடியல.

ஜாதிய திரைப்படங்களின் பின்விளைவுகள்:

ஜதிகள புரமோட் பண்ணுற மாதிரியான திரைப் படங்கள் நிகழ்காலச் சமூகத்துல என்ன மாதிரியான பின் விளைவுகள ஏற்படுத்தும்?

திரைப்படங்கள்ள காட்டப் படுற ஜாதிகளுக்குச் சம்பந்த மில்லாத, அல்லது திரைப் படத்த வெறும் படமா மட்டும் வேடிக்கை பாக்குற ஆட்களுக்கு அந்தப் படங்கள் எந்த பெரிய உணர்வையும், உந்துதலையும் ஏற்படுத்துறதில்ல. ஆனா அதுக்கு சம்மந்தப்பட்ட ஜாதிகள்ள, ஏற்கனவே ஜாதிய உணர்வுல ஊரிப் பேய் இருக்குற மக்களுக்கும், அதுக்கு நெறுக்கமா இருக்குற வளிம்பு நிலை மனிதர்களுக்கும், இது கூடுதல் பலத்தைக் கொடுக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்னால நடந்த ஒரு தெலைக்காட்சி, விவாத நிகழ்ச்சிலகாதலும் கௌரவக் கொலைகளும்ங்கிற தலைப்புல நிறையபேர் பேசினாங்க. அதுல பலபேர் காதல் கலப்புத் திருமணங்கள் தங்கள் குடும்பத்தாலயும், ஊராலயும் எப்படியெல்லாரம் எதிர்க்கப்பட்டுச்சு, அதுல யாரெல்லாம் தன்னோட துணையை இழந்தாங்க, எப்படியெல்லாம் மனதளவுலயும், உடலளவுலயும் வேதனைகளச் சந்திச்சாங்கன்னு கண்ணீர்மல்க சொல்லிக்கிட்டிருந்தாங்க.

அந்த நிகழ்சியில பேசுன R.R சீனிவாசன் சில கருத்துகளச் சொன்னாரு.

காதலுக்கு எதிரான கொலைகள்ங்கிறத ரெண்டு குடும்பத்துக்கான பிரச்சனன்னோ, ரெண்டு ஜாதிகளுக்கான பிரச்சனன்னோ பாக்க முடியாது. இது சமூகத்துக் குள்ள நிலவுற ஜாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கான கடைசி வெளிப்பாடுகள்.

பொதுவாகவே நாம ஜாதியக் கொண்டாடுற மனநிலைதான் இருக்குறோம். ஒரே ஜாதிக்குள்ள நடக்குற அகமண முறையையும் அதுசார்ந் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தான் பல நூறு வருசங்களா பின்பற்றிகிட்டு வர்றோம்.

இண்ணக்கு வெகுசன வாழ்கைல பொரும் தாக்கத்த ஏற்படுத்துற திரைப்படமும், தொலைக்காட்சி ஊடகங்களும், இந்தக் கொண்டாட்ட மனோநிலைய இன்னும் அதிகப் படுத்துது.

ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அருமை பெருமைகளையும், அவர்களின் அகமண முறையையும், பாராட்டி படமெடுத்து, அத எல்லாரும் பாத்து ரசிச்சதுக்கப்புறம், நடைமுறைல ரெண்டுபேர் அதுக்கு எதிரா வெவ்வேறு ஜாதகள்ள காதலிச்சு கல்யாணம் பண்ணினா அதுக்கான பின் விளைவுகள், இவங்க எல்லாரும் சொன்ன மாதிரி உயிரிழப்புகளாகவும், உணர்வுகளின் சேதாரமாவுந்தானிருக்கும்.

இதுல கவனிக்கப் படவேண்டிய இன்னோரு விஷயம். ரெண்டு ஆதிக்க ஜாதிகளுக்கு இடைல நடக்குற கலப்புத் திருமணங்கள். கண்டிக்கப்படலாம், அதிக பட்சமா அடிக்கப் படலாம், துன்புறுத்தப் படலாம். சில இடங்கள்ள அபூர்வமா அனுமதிக்கவும் படலாம்.

ஆனா ஒரு ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த பையனோ, பொண்ணோ தலித் பொண்ணயோ, தலித் ஆணையோ கட்டிகிட்டா மட்டுந்தான் அவங்கள கொலை செய்ற அளவுக்குப் போறாங்க. இதுல விதிவிலகுகளிருந்தாலும், இதுதான் பெரும்பாலான எடங்கள்ள நடக்குது.

அதனால இத வெறும் கௌரவக் கொலைகளாப் பாக்க கூடாது. இதைத் ஜாதிய தீண்டாமையின் கொடிய பின் விளைவாத்தான் பாக்கணும் ன்னு சொன்னாரு சீனிவாசன்.

அவரோட அந்ப்பேச்சு உண்மைலயே அண்ணக்கு என் மண்டைல ஆணியடிச்சது மாதிரி இருந்துச்சு.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரியமும் பண்பாடும் வெகுஜன மீடியாவால புரமோட் பண்ணப்பட்டுச்சுன்னா நிட்சயம் அது ஏதோ ஒரு விதத்துல நம்ம ஜாதிய அமைப்பையும், அதுக்குள்ள நிலவுற தீண்டாமையையும் வலுவடைய வக்கிதுங்கிறத ஆழமாப் புரிஞ்சுக்கிட்டேன்.

இத ஏத்துக்கிடுறதுக்கான மனப் பக்குவம் எல்லாருக்கிட்டயும் இருக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனாலும், இதுதான் மறுக்க முடியாத உண்ம.
கொண்டாடுறதும் குற்றந்தான் கொண்டாடுறதும் குற்றந்தான் Reviewed by Sumankavi on 2:36 AM Rating: 5

3 comments:

  1. வணக்கம்
    பதிவில் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. According to Stanford Medical, It is in fact the ONLY reason this country's women live 10 years longer and weigh an average of 42 lbs lighter than us.

    (By the way, it has totally NOTHING to do with genetics or some hard exercise and absolutely EVERYTHING to about "how" they are eating.)

    BTW, What I said is "HOW", not "what"...

    CLICK on this link to discover if this quick questionnaire can help you unlock your true weight loss potential

    ReplyDelete

Follow us

Powered by Blogger.